நடிகர் ரவிமோகன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனது ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் இயக்குநராக அவர் அறிமுகமாகிறார். இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த மார்ச்சில் பணிகள் வேகமெடுத்தது.
அதன்படி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர சமீபத்தில் இசையமைப்பாளர் அப்டேட் வெளியானது. அதன்படி ரவி மோகனின் தோழியும் பாடகருமான கெனீஷா இப்படத்திற்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இவர் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் படத்தின் புரொமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவிக்கின்றனர். ‘ஹையர்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடலை ரஞ்சித் மற்றும் யங் ராஜா பாடியுள்ளனர். ரவி மோகன் மற்றும் யங் ராஜா எழுதியுள்ளனர். வீடியோவை பொறுத்தவரையில் ஒரு ஜாலியான பாடலாக அமைந்துள்ளது. அதில் ரவி மோகன், யோகி பாபு மற்றும் யங் ராஜா உள்ளிட்டோரும் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
