பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: அமெரிக்க நிறுவனம் கணிப்பு

வாஷிங்டன்:இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. இது பாகிஸ்தானை விட 20 அதிகம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு(fas) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற முறையில் செயல்படும் தன்னார்வ நிறுவனமான அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன், ” இந்தியாவின் அணு ஆயுதங்கள்- 2026” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, அணுஆயுதங்களை தாங்கி செல்லும் 9 வகையான அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. அதில் இரண்டு போர் விமானங்கள். நிலத்தில் இருந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் -6 மற்றும் கடலில் இருந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை -1 என மொத்தம் 9 உள்ளன.இன்னும் இரண்டு அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவை விரைவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை அடுத்த சில ஆண்டுகளில் ஆயுதப்படைகளில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கையிருப்பில் 160 அணு ஆயுதங்கள் வைத்திருக்கலாம். மேலும் உள்ள ஏவுகணைகளுக்காக கூடுதலாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதால், மொத்த எண்ணிக்கை 190 ஆக இருக்கும். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை விரைவில் படைகளில் சேர்க்கப்படும்போது எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.இந்தியா தனது அணு ஆயுத அமைப்புகளை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய ஆயுத அமைப்புகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

அணு ஆயுதங்களுகாக 730 கிலோ புளூட்டோனியத்தை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. ஒவ்வொரு அணு ஆயுதத்திற்கும் 4 கிலோ புளூட்டோனியம் தேவை என்ற கணக்கில் தற்போது கையிருப்பில் உள்ள அளவில், 140 முதல் 225 வரையிலான அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மற்ற நாடுகளில் உள்ள எண்ணிக்கை

உலகில் அதிகமாக ரஷ்யாவிடம் 5,420 அணு ஆயுதங்கள் உள்ளன.

அமெரிக்காவிடம் – 5,042

சீனாவிடம் -620

பிரான்சிடம் -730

பிரிட்டனிடம் -225

இஸ்ரேலிடம் -90

வட கொரியாவிடம் – 60 அணு ஆயுதங்கள் உள்ளன.

தெற்கு ஆசியாவில் அதிகபட்சமாக இந்தியாவிடம் 190ம், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன.

இந்தியாவின் கொள்கை

அணு ஆயுதங்களை எப்போதும் முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link