தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் இபிஎஸ்

சென்னை: அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. நேற்று திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இன்று தவெகவும் வேட்பாளர்களை அறிவித்தது. இரு தொகுதிகளிலும் ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுராந்தம் தொகுதியில், அதிமுகவின் செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி இணைச் செயலாளருமான கணிதா சம்பத்தும்,

தாராபுரத்தில், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலர் பானுமதியும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்து உள்ளார்.

இடைத்தேர்தலில் யார் போட்டி?

தாராபுரம்

சத்தியபாமா – தவெக

சுகன்யா – திமுக

பானுமதி -அதிமுக

மதுராந்தகம்

மரகதம் குமரவேல் – தவெக

பரந்தாமன் – திமுக

கணிதா சம்பத் – அதிமுக

Source link