ஜெர்மனி அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு; முக்கிய துறைகளில் உறவை பலப்படுத்த உறுதி

புதுடில்லி: வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இருநாடுகளின் உறவை பலப்படுத்த ஜெர்மனி அதிபர் பிரைட்ரிக் மெர்ஸூடன் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் பிரைட்ரிக் மெர்ஸூம் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்; ஜெர்மனி அதிபருடன் ஆக்கப்பூர்வமான, பயனுள்ள உரையாடலை நிகழ்த்தினேன். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.

ஐரோப்பாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவில் ஜெர்மனி ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் மதிப்புமிக்க கூட்டாளியாகவும் திகழ்கிறது. இரு நாட்டு மக்களின் நலனுக்காக, ராஜதந்திர கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link