முதலமைச்சருடன் தமிழக அரசின் முக்கியத் துறைச் செயலாளர்கள் மற்றும் வழிகாட்டி நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினரும் உடன் சென்றுள்ளனர். இந்த லண்டன் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தின் தொழில் வளம் மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசிக்க உள்ளார்.
இதன் மூலம் தமிழகத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஈர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ திட்டத்திற்காக, லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய வளாகத்தையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
