India vs Bangladesh Women’s Asia Cup 2026 Live score: 10-வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), ’பி” பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகள் வெளியேறின.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்த நிலையில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்கதேச அணியுடன் மோதி வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமாடிய ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடியில், 2 ரன் மட்டுமே எடுத்து ஸ்மிருதி மந்தனா ஏமாற்றம் அளித்தார். ஆனாலும் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய ஷஃபாலி வர்மா அரைசதம் விளாசி அசத்தினார்.
அவருடன் ஜோடி அமைத்த பிரதிகா ராவல் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். சிறப்பாக ஆடி வந்த ஷஃபாலி வர்மா 64 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் 21 ரன்னுக்கும், தீப்தி சர்மா ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் ஜோடி அமைத்த பார்தி ஃபுல்மாலி ரன் ஏதும் எடுக்காமல் ரன்-அவுட் ஆகினார். களத்தில் இருந் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 24 ரன் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய மகளிர் அணி 149 ரன்கள் எடுத்தது. இதனால், வங்கதேச மகளிர் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
வங்கதேச மகளிர் அணி பேட்டிங்
தொடர்ந்து, 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமாடிய ஜுவைரியா ஃபெர்டஸ் 14 ரன்னுக்கும், திலாரா அக்டர் 21 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தற்போது 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் 40 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீராங்கனைகள் பட்டியல்:
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, பிரேமா ராவத், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், நந்தனி ஷர்மா.
வங்கதேசம்: திலாரா அக்டர், ஜுவைரியா ஃபெர்டஸ், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தர், ஃபஹிமா காதுன், நஹிதா அக்தர், ரபேயா கான், சுல்தானா காதுன், மருஃபா அக்டர்
