தமிழக அரசியலில் பேச்சாளராக முத்திரை பதித்த முக்கிய நபர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். தி.மு.க., ம.தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் பயணித்த அவர் தற்போ தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். இதனிடையே அவர் தற்போது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது,
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் விஜயே அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் என் பெயரை சொல்லுங்கள் என்று மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்திருந்தார். இதனால் அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வந்த இடைத்தரகர்கள் தற்போது காணாமல்போனதாகவும் தகவல்கள் இருக்கிறது.
இந்நிலையில், நாஞ்சில் சம்பத்த வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பணிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த பணியிட மாறுதல்கள் அனைத்தும் தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையில் வெளிப்படையாக ஆன்லைன் மூலமாகவே வெளிப்படையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் மக்களை ஏமாற்றும் வகையில் தலைமைச் செயலாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள பதிவில், “வேலை வாங்கித் தருகிறேன்; மாறுதல் பெற்றுத் தருகிறேன் என்று கோட்டை வட்டாரத்தில் ஒரு மோசடிப் பேர்வளி நாஞ்சில் ஜீவா என்ற பெயரில் உலவுகிறான். எனக்கும், அவனுக்கும் எங்கள் மதிப்புமிக்க குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் ஏமாற வேண்டாம்..!” என்று பதிவிட்டுள்ளார்.
வேலை வாங்கித் தருகிறேன்; மாறுதல் பெற்றுத் தருகிறேன் என்று கோட்டை வட்டாரத்தில் ஒரு மோசடிப் பேர்வளி நாஞ்சில் ஜீவா என்ற பெயரில் உலவுகிறான். எனக்கும், அவனுக்கும் எங்கள் மதிப்புமிக்க குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் ஏமாற வேண்டாம்..!
— Nanjil Sampath (@NanjilPSampath) September 10, 2026
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘நாஞ்சில் ஜீவா’ என்ற பெயரில் சுற்றும் அந்த நபருக்கும், தனக்கும் உறவோ அல்லது தொழில்முறைத் தொடர்போ கிடையாது என்பதை நாஞ்சில் சம்பத் இந்த பதிவின் மூலம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
