இந்தியா வருகிறார் வினிசியஸ் ஜூனியர்: பிரேசில் அணி அறிவிப்பு

ரியோ டி ஜெனிரோ: இந்தியாவுக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்கும் பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், ராபின்ஹா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா வரவுள்ள பிரேசில் கால்பந்து அணி, வரும் அக். 3ல் கொல்கட்டாவில் நடக்கவுள்ள சர்வதேச ‘நட்பு’ கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டிக்கான 26 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை, பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டது.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் கைப்பற்றிய, உலகின் ‘நம்பர்-5’ பிரேசில் அணியில், முன்னணி வீரர்களான வினிசியஸ் ஜூனியர், ராபின்ஹா, மார்குய்னாஸ் இடம் பெற்றுள்ளனர். கேப்ரியல் மகால்ஹேஸ், புருனோ குய்மரேஸ், தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.கோல்கீப்பர்களாக ஹுகோ சவுசா, பெட்ரோ மோரிஸ்கோ, ஒடாவியோ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்கள வீரர்கள் என்டிரிக், ஸ்டீபன், ஜோவோ பெட்ரோ, பெட்ரோ, ரேயான், சாமுவேல் லினோ இடம் பெற்றுள்ளனர்.

Source link