சென்னை: தமிழக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, ‘டேட்டா ஸ்டோரேஜ்’ வசதிக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை, ‘எல்காட்’ நிறுவனம் வழங்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு தங்களின் தரவுகளை பாதுகாக்கும், ‘டேட்டா ஸ்டோரேஜ்’ பணிக்கு அதிகம் செலவாகின்றன.
தமிழக அரசின், ‘எல்காட்’ நிறுவனம், தமிழக புத்தொழில் தரவு மைய சேவை திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக் கு ஆண்டுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் வரை, மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான விண்ணப்பத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் பெற்று, எல்காட்டிற்கு வழங்க உள்ளது.
தற்போது, நிதியுதவி பெற விருப்பம் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு, 155343 மற்றும் 044 22256789 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
