நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிரடி; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, தனியார் வங்கி என அனைத்து வங்கி நிறுவனங்களிலும் வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11-09-26) நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால், வெள்ளிக்கிழமை (இன்று), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளன. தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவை இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Source link