தெற்கு ரயில்வேயில் 100% மின்மயமாக்கல் பணி நிறைவு: புதிய மைல்கல்லை எட்டி சாதனை

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ. தொலைவி​லான ஒட்​டுமொத்த அகலப்​பாதை​யும் தற்​போது மின்​மய​மாக்​கப்​பட்டு புதிய வரலாற்று மைல்​கல்லை எட்​டி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நாடு முழு​வதும் ரயில்வே உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​தும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. புதிய ரயில்​களை இயக்​க​வும், ரயில் பாதைகளை மேம்​படுத்​த​வும், ரயில் நிலை​யங்​களை சீரமைக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, அகல ரயில் பாதைகளை மின்​மய​மாக்​கும் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இதன் மூலம் பாரம்​பரிய டீசல் இன்​ஜின்​களுக்​குப் பதிலாக அதிவேக மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கு உகந்த மின்​சார இன்​ஜின்​கள் மூலம் ரயில்​களை இயக்க முடி​யும். நாடு முழு​வதும் ஒட்​டுமொத்த அகல ரயில்​பாதை வலை​யமைப்​பை​யும் 100 சதவீதம் மின்​மய​மாக்​கும் இலக்கை நோக்கி இந்​திய ரயில்வே மிக வேக​மாக முன்​னேறி வரு​கிறது.

தற்​போதைய நில​வரப்​படி, நாடு முழு​வதும் 99.6 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பாதைகள் மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளன. தெற்கு ரயில்​வே​யில், கடந்த ஆண்டு நில​வரப்​படி, மொத்த வலை​யமைப்​பில் 98.7 சதவீதம் மின்​மய​மாக்​கல் எட்​டப்​பட்​டிருந்​தது.

பட்​டுக்​கோட்டை – காரைக்​குடி இடையே 71 கி.மீ. தொலைவு ரயில்​பாதை மட்​டுமே எஞ்​சி​யிருந்​தது. இந்த வழித்​தடத்தை மின்​மய​மாக்​கும் பணி சமீபத்​தில் நிறைவடைந்​தது.

இதையடுத்து தெற்கு ரயில்​வே​யின் முதன்மை தலைமை மின் பொறி​யாளர் கணேஷ் தலை​மையி​லான உயர​தி​காரி​கள் நேற்று முன்​தினம் இந்த வழித்​தடத்​தில் ரயிலை இயக்கி ஆய்வு மேற்​கொண்​டனர்.

இது தொடர்​பாக தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: பட்​டுக்​கோட்டை – காரைக்​குடி இடையே மின்​மய​மாக்​கப்​பட்ட ரயில் பாதை​யில் ஆய்​வுப் பணி வெற்​றிகர​மாக முடிந்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் அகல ரயில்​பாதைகளை மின்​மய​மாக்​கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்​துள்​ளது. இதன் மூலம் வரலாற்று மைல் கல்லை தெற்கு ரயில்வே எட்​டி​யுள்​ளது.

தற்​போது, ஒட்​டுமொத்த 5,068 கி.மீ தூர​மும் முழு​மை​யாக மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ள​தால், இனி எஞ்​சின் மாற்ற வேண்​டிய அவசி​யமில்​லை. இதன் மூலம் மண்​டலம் முழு​வதும் தடையற்ற மின்​சார ரயில் சேவை​களை வழங்க முடி​யும். ரயில்​களை விரை​வாக இயக்க முடிவதுடன், செயல்​பாட்​டுத் திறன் மற்​றும் இன்​ஜின்​களின் பயன்​பாடு கணிச​மாக மேம்​படும் என அவர்​கள் கூறினர்.

மின்​சார ரயில் இயக்க வரலாறு

தெற்கு ரயில்​வே​யில் மின்​சார ரயில் இயக்​கம் என்​பது கடந்த 1931-ம் ஆண்டு மே 11-ம் தேதி மெட்​ராஸில் (சென்​னை) தொடங்​கியது. இதன் மூலம் பம்​பாய்க்கு அடுத்து மின்​சார ரயில் சேவையை அறி​முகப்​படுத்​திய இந்​தி​யா​வின் 2-வது பெருநகர​மாக சென்னை திகழ்ந்​தது.

இதைத் தொடர்ந்​து, 1968-ம் ஆண்டு சென்னை கடற்​கரை மற்​றும் தாம்​பரம் இடையே மின்​மய​மாக்​கல் தொடங்​கப்​பட்​டது. இந்த நீண்ட நெடிய பயணத்​தின் இறு​திக்​கட்​ட​மாக தற்​போது 100 சதவீதம் மின்​மய​மாக்​கல் சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

Source link