சிவகார்த்திகேயன், தற்போது ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘தாய்க் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘டர்மரிக் மீடியா’ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டியும் நடிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு முன்னோட்டம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விருமாண்டி சாமியாடியாக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். இதனால் முருகனுக்கு எதிரான படமா என இயக்குநரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இரண்டு தெய்வங்களையும் வழிபடுகிற கதையாக இருக்குமெனவும் யாருக்கும் எதிரான படமாக இது இருக்காது எனவும் விளக்கமளித்திருந்தார். பின்பு மே மாதம் மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்தது. இது கடந்த ஜூனில் நிறைவு பெற்றது.
இதையடுத்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் மதுரையில் தொடங்கியது. இதில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்து நடித்தார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முறுக்கு மீசையுடன் நல்ல உடல் கட்டமைப்புடன் சிவகார்த்திகேயன் வர… அவரது மாற்றம் குறித்து பின்னணி குரலில் விவரிக்கப்படுகிறது. அதில், ‘மதுரைக்காரனா, ஒரு உசிலம்பட்டி காரனா, தோற்றத்திலும் பார்க்கலாம், ஸ்லேங்கிலும் பார்க்கலாம், அவர் நட பாவனை டோட்டலாவே மாத்திட்டாப்ள’ என்று இடம் பெறுகிறது.
பின்பு பார்க்யஸ்ரீ போர்ஸுடன் ஒரு காட்சி, பால சரவணனுடன் ஒரு காட்சி என இன்னும் சில காட்சிகள் இடம் பெறுகிறது. இறுதியில் பின்னணி குரலில், ‘மணமா படையல் தயாராகிட்டு இருக்கு, சாப்பிடுறதுக்கு எல்லாம் வந்துருங்கடியேய்…’ என்று வருகிறது. இந்த வீடியோ மற்றும் அதில் இடம் பெறும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு#சேயோன்#Seyon#VetrivelVeeravel#Varendi#KamalHaasan#Sivakarthikeyan@ikamalhaasan@Siva_Kartikeyan#Mahendran@Dir_SivakumarM@Music_Santhosh@Seeman4TN@anbariv#Disney#BhagyashriBorse@RajbShettyOMK@RKFI… pic.twitter.com/u8heLq7Erl
— Raaj Kamal Films International (@RKFI) September 11, 2026
