ஜனநாயக மாண்பை காப்பேன்: புதிய பொறுப்பு குறித்து கனிமொழி சந்தோஷ் அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான சட்ட விதிகள் ஆய்வுக்குழுவின் புதிய உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கனிமொழி சந்தோஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமக்கு இந்த முக்கிய பொறுப்பை வழங்கி கௌரவித்த முதலமைச்சர் விஜய்க்கும்,  சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தனது மரியாதையுடன் கூடிய நன்றியினை உரித்தாக்கியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், இந்த நியமனத்தை ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு சிறந்த வாய்ப்பாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவைச் செயல்பாடுகளின் சிறப்பையும் வலிமையையும் மேலும் அதிகரிக்கும் வகையில், சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் அணுகி தனது முழு பங்களிப்பை வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட இந்த புதிய கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், தொலைநோக்குப் பார்வையடனும், மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.



Source link