ரூ. 1200 கோடியில் முதல்வர் இல்லத்திற்கு அருகே தலைமைச் செயலகம்.. எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது: ஆர்.பி. உதயகுமார் – aiadmk former minister rb udhayakumar comment on pattinapakkam new secretariat announcement

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது. பட்டினப்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க உள்ளதாக முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இதற்கு அரசியல் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் புதிய தலைமை செயலகம் அறிவிப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

அதாவது பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி. உதயகுமார் தவெக அரசு அமைத்ததற்கு பின்பாக தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளது தொடர்பாக பேசினார். அதோடு கஜானாவில் பணம் இல்லாததால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்த நிலையில், தற்போது 1200 கோடி ரூபாயில் தலைமை செயலகம் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது எனவும் ஆர்.பி. உதயகுமார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம்

பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம் தொடர்பான அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆர்.பி. உதயகுமாரும் இந்த திட்டத்தினை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் தான் ஆகியுள்ளது. இன்னும் தமிழ்நாட்டிலே விவசாயிகள் கோரிக்கை, பயிர்க்கடன் தள்ளுபடி எல்லாம் நிலுவையில் உள்ளது. அதையே முதல்வர் இன்னும் முழுமையாக முடிச்சு வைக்கல.

பயிர்க்கடன் தள்ளுபடி

இதுல 110 நாட்களிலே அவர் மிகப்பெரிய அளவில் 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்காங்க. இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார்கள். பட்ஜெட்டில் கஜானா காலி என சொல்லி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மனமில்லாத முதலமைச்சர், ரூ. 1200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டவுள்ளதாக அறிவித்துள்ளார். முதல்வருடைய இல்லத்தின் அருகே பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க உள்ளதாக அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வல்லுநர் குழு ஆலோசனை

இவர்கள் எப்படி நிதி நிலைமை கையாளுகிறார்கள். வல்லுநர் குழு ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். இந்த குழுவின் ஆலோசனை அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதா? எந்த அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது என விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அதே போல் முதல்வரின் லண்டன் பயணம் தொடர்பாகவும் சில கருத்துக்களை ஆர்.பி. உதயகுமார் பகிர்ந்துள்ளார்.

திரிஷாவை Deputy CM பதவி ! வீடியோ வெளியிட்ட R.B.உதயகுமார்

முதலீட்டாளர்கள் மாநாடு

அதாவது, ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அது ஒரு மர்மமான ஒன்றாகவே இதுவரை தமிழ்நாடு பார்க்காத ஒன்றாக உள்ளது. தற்போது அவர் லண்டன் சென்றிருப்பது, திரும்பி வருகிற போது அவர்கள் கொடுக்கிற அறிக்கையை வைத்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனுள்ளதா, இல்லையா? என்பது தெரியும். இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

Source link