”அந்த கட்சி என் முன்னாள் காதலி”; பாஜக எம்.பி. சாடல்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் மாநிலங்களைவை நாடாளுமன்ற உறுப்பினரான ராகவ் சத்தா, இவர் கட்சியில் இருந்து விலகிய போது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இரு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துக்க்கொண்டன்பர். 

இதையடுத்து சிறிது நாட்கள் அமைதியான போக்கு நிலவி வந்த நிலையில், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 746 வாக்காளர்கள் மட்டுமே இருந்த நிலையில், ராஜீந்தர் நகர் வாக்காளர் பட்டியலில் ராகவ் சத்தாவின் பெயர் 747-வது வாக்காளராக இடம்பெற்றிருந்ததாக ஆம் ஆத்மியின் டெல்லி மாநிலத் தலைவர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பரத்வாஜ் கூறுகையில், “இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல. இது ஒரு உண்மை. ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முதல் கட்டத்தின்படி, ராகவ் சத்தா முன்பு வசித்த ராஜீந்தர் நகர் வாக்குச்சாவடியில் 746 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். 

இப்போது, ​​ராஜீந்தர் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அவரது பெயர் திடீரென மீண்டும் இடம்பெற்றுள்ளதையும், அவரது வரிசை எண் 747 ஆக இருப்பதையும் நான் கவனிக்கிறேன். இது எப்படி நடந்தது? என்பதைத் தேர்தல் ஆணையம் மற்றும் ராகவ் சத்தா ஆகிய இருவரிடமிருந்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். இதற்கென ஏதேனும் குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்,” என்றும் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சத்தா, ”ஆம் ஆத்மி கட்சி எந்த நிலைக்குச் சென்றுள்ளது என்றால், நான் அவர்களின் கனவில் ஒரு பேயாக வரும் அளவுக்கு அவர்கள் என்னைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சி ஒரு முன்னாள் காதலியைப் போலத் தெரிகிறது.  காதலன் அவளை விட்டுவிட்டுத் தன் வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிட்டாலும், அவள் இன்னும் என் மீது தீவிரமான காதலில் இருக்கிறாள்,” என்று விமர்சித்திருந்தார்.  இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

Source link