டில்லியில் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் சந்திப்பு

புதுடில்லி: டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, புடினுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக மோடி வழங்கினார்.

டில்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும்( செப்.,12) , நாளை மறுநாளும் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின், 3 நாள் பயணமாக இன்று( செப்.,11) டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாரத மண்டபத்தில் பிரதமர் மோடியை, அதிபர் புடின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, திருக்குறள் புத்தகத்தை புடினுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது , ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புடின், கடந்த ஆண்டு இந்தியா – ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே புடினும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

Source link