“நீங்கள் தான் உதவ வேண்டும்” – விஜய் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சமீபகாலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இப்போது 6 வருடங்களுக்கு பிறகு ‘பாரபங்கி’ எனும் வெப் தொடர் மூலம் கம் – பேக் கொடுக்கவுள்ளார். இவர் தமிழில் முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவைத் தாண்டி உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள் இருந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட அந்த பவுடரின் பிராண்டையும் அதில் இருந்த புழுவையும் தெளிவாகக் காட்டியுள்ளார். அதோடு  மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டேவை அப்பதிவில் குறிப்பிட்டு, இதற்குத் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “துக்காராம் முண்டே அவர்களே, நீங்களே எங்களது ஒரே நம்பிக்கை. நாங்கள் வாங்கும் பொருட்களில் கெட்டுப்போன அல்லது கலப்படமான பொருட்கள் கிடைக்காமல் இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்” என்றுள்ளார். ஏற்கனவே துக்காராம் முண்டே மகாராஷ்டிரா முழுவதும் உணவு வணிக நிறுவனங்களில் தொடர் சோதனைகள் மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது அம்மாநில மக்களின் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக ப்ரீத்தி ஜிந்தா,  ட்விங்கிள் கண்ணா உள்ளிட்ட நடிகைகளின் பாராட்டையும் பெற்றது. 

இந்த சூழலில் பிபாஷா பாசு குற்றம் சுமத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link