“பாமரர்களிடமும் இலக்கியத்தை கொண்டு சேர்த்தவர்…” – ரஜினி இரங்கல்

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் தமிழக மக்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு தமிழ் உலகிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினியுடன் சாலமன் பாப்பையா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link