லண்டனில் த்ரிஷா: சீனியர் நடிகையுடன் செல்ஃபி கொண்டாட்டம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை த்ரிஷா, தற்போது நடித்து வரும மலையாள படம் ஒன்றிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கு நடிகை ராதிகா சரத்குமாருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கருப்பு. சூர்யா நாயகனாக நடித்திருந்த இந்த படம், ரூ300 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதன்பிறகு த்ரிஷா வேறு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆனதாக தகவல்கள் வெளியாகாத நிலையில், தற்போது அவர் மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவுடன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, இந்த படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்த படத்தின் படப்பிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் கடைசியாக பிப்பா என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இந்தியில் வெளியான இந்த படத்தில் இஷான் கட்டர் நாயகனாக நடித்திருந்தார். 

தற்போது த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்குவதன் மூலம் அவர் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ’விஸ்வம்பரா’ படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷா அடுது்து  மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஷூட்டிங்கிற்காக லண்டனில் இருக்கும் நடிகை த்ரிஷா, நடிகை ராதிகாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



Source link