கீவ்: உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை கடந்து தொடர்ந்து நடக்கிறது. களத்தில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் மனித மற்றும் ஆயுத இழப்புகளை சந்தித்தாலும், தன் தாக்குதல்களை தொடர்கிறது-. இருப்பினும், உக்ரைனுக்கு எதிரான அதன் வேகம் கணிசமாக குறைந்துள்ளதாக, பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை தெரிவிக்கிறது.
பிரிட்டன் ராணுவ தரவுகள் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை, 5 லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 15 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். மனித இழப்புகளுடன் சேர்த்து, 10,000க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 3,000க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷ்ய ராணுவம் இழந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
