தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தினரின் பெருமை; பவள விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் புகழாரம்

சென்னை: குமரி மாவட்டத்தில் இருந்து முளைத்தது எங்களுக்கு அதில் ஒரு பெருமை எப்பொழுதும் உண்டு. அங்கு இருந்து வளர்ந்து இன்று தமிழகம் முழுக்க பரவி இருக்கும் பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது என எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

‘தினமலர்’ பவள விழாவை முன்னிட்டு, கடந்த, 5ம் தேதி, சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நினைவு தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் இன்று (செப் 12) ‘தினமலர்’ நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் தமிழ்ப்பேராயம் அமைப்பும் இணைந்து நடத்தும், ‘தினமலர்’ பவளவிழா நடைபெற்றது.

காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை முனைவர் தி.பொ.கணேசன் சிற்றரங்கத்தில் நடந்த பவள விழாவிற்கு, பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்தார்.’ஒரு பத்திரிகையால் என்ன சாதிக்க முடியும்; அதில், ‘தினமலர்’ நாளிதழ் என்ன சாதித்திருக்கிறது’ என்ற தலைப்பில், எழுத்தாளர் ஜெயமோகன் கருத்துரை வழங்கினார்.

அவர் பேசியதாவது: பொதுவாக மேடைகளில் அதிகம் பேசக்கூடாது என்ற எண்ணம் கொண்டுள்ளேன். ஒரு ஆண்டில் 6 அல்லது 7 மேடைகளுக்கு மேல் பேசுவதில்லை; பெரும்பாலும் சிறு கூட்டங்கள், சிற்றிதழ் சார்ந்த இலக்கிய கூட்டங்களில் தான் கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு நாளிதழின் பவளவிழா போன்ற பெரிய நிகழ்வில் கலந்து கொள்வது மிக அரிது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான காரணங்களை நானே கேட்டு கொண்ட போது சில பதில்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

எங்களுக்கு பெருமை

முதல் காரணம், இன்று தமிழகம் முழுவதும் விரிந்து பரந்து இருந்தாலும் கூட, தினமலர் குமரி மாவட்டத்தினரின் இதழ்; அங்கு இருந்து முளைத்தது எங்களுக்கு அதில் ஒரு பெருமை எப்பொழுதும் உண்டு. அங்கு இருந்து வளர்ந்து இன்று தமிழகம் முழுக்க பரவி இருக்கும் பெரிய நிறுவனமாக மாறி இருக்கிறது. இரண்டாவதாக இன்னொரு காரணம் உண்டு. எனது ஆசிரியர் சுந்தர ராமசாமியுடன் பல வகையிலும் தொடர்புடையது தினமலர். இவ்வாறு எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தினமலர் மற்றும் எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் இணைந்து நடத்தும் தினமலர் 75 பவள விழா; நேரலை ஒளிபரப்பு

Source link