தவெக மண்ணை கவ்வப் போகுது.. அதற்கு காரணம் இவர்தான்: நிர்மல் குமார் பேச்சுக்கு திமுக பரந்தாமன் கடும் பதிலடி – dmk paranthaman delivers a sharp retort to minister nirmal kumar remarks

தவெகவை சார்ந்த அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை நோக்கி வைக்கு விமர்சனங்களுக்கு எல்லாம், எதிர் தரப்பில் இருந்து பரந்தாமன் காட்டமான பதிலடியை கொடுத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசியதற்கு அவர் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது பெரும் பரபரப்பினை கிளப்பி இருந்தது. இந்நிலையில் மீண்டும் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சிற்கு தனது சமூக வலைத்தளத்தில் கடும் பதிலடி ஒன்றை திமுக பரந்தாமன் கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசியை அமைச்சர் நிர்மல் குமார், திமுக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிடும் பரந்தாமன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த போது தொகுதி பக்கமே செல்லாதவர். உள்ளூரில் செல்லுப்படியாகாத ஒருவரை மதுராந்தகத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். நாளை டெபாசிட் இழக்க நேரிட்டால், வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதே காரணம் என சொல்ல என விமர்சனத்தை முன்வைத்தார்.

அதோடு இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது எனவும் பேசியிருந்தார் நிர்மல் குமார். இந்நிலையில் அவருடைய இந்த பேச்சுக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளருமான பரந்தாமன் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பல கட்சிகளால் விரட்டி அடிக்கப்பட்டு உசிலம்பட்டியில் இருந்து ஓடி போய் வேற தொகுதியில் நின்ற நிர்மல் குமாருக்கு திமுக குறித்தும், என்னை பற்றியும் பேச எந்த அருகதையும் இல்லை என தனது பதிவின் ஆரம்பத்திலே விளாசியுள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய பதிவில், அடுத்தக்கட்சி எம்எல்ஏக்களுக்கு இந்த சோபா கோஷ்டி எதை எதையோ டெபாசிட் பண்ண காரணத்தால் தான் இன்னைக்கு இந்த இடைத்தேர்தலே நடக்குது. ஆகவே மக்கள் எங்களுக்கு வெற்றியை தான் தருவாங்க. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மின்வெட்டால், இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், இனி வருகிற தேர்தல் அனைத்திலும் தவெக மண்ணை கவ்வப் போகிறது என்றால், அதற்கு முக்கிய காரணமாக இருக்க போவது இந்த பல கட்சி பலராமன் பொய் வாயர் நிர்மல் குமார்தான் என தன்னுடைய பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார் பரந்தாமன்.

Source link