திமுகவினர் மீது இன்று அல்ல, நாளை அல்ல, எத்தனை ஆண்டுகள் தேடினாலும் எந்த விதமான தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் முதல்வர் விஜய் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், மு.க.ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டது குறித்து செய்கையை செய்து காட்டினார் முதல்வர் விஜய் . இதற்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சட்டபேரவையில் மிசா குறித்து பேசிய முதல்வர் விஜய்
இதனைத் தொடர்ந்து சட்டபேரவையில் நான் உள்நோக்கத்துடன் அந்த செய்கை செய்யவில்லை என்று முதல்வர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும், திமுக சார்ப்பில் விஜய்யை கண்டித்து மாநிலம் முழுதுவம் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்படி, கரூரில் நடந்த போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டமன்றத்தில் பேச வேண்டிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, சினிமா கிளைமாக்ஸ் காட்சியில் பேசுவது போல திமுக தலைவர்கள் மீது வசனங்களை மட்டுமே முதல்வர் விஜய் பேசியுள்ளார். ரியல் ஆட்சியைத் தராமல் ‘ரீல்ஸ்’ ஆட்சியைத் தான் தவேக அரசு நடத்தி வருகிறது.மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று கூறினார்.
எத்தனை ஆண்டுகள் தேடினாலும் தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது
மேலும் சட்டமன்றத்தில் என்னிடம் 3 துறைகளை சார்ந்த கோப்புகள் உள்ளது. அதை திறக்க வேண்டாம் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அப்போது அந்த கோப்புகளைத் திறந்து காட்டுங்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் நாளிலேயே சவால் விடுத்தார். ஆனால், பழைய வழக்குகள் மற்றும் மனுக்களின் அறிக்கை களை மட்டுமே வைத்துக்கொண்டு ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல முதலமைச்சர் விஜய் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.
திமுக ஆட்சியில் எவ்விதத் தவறுகளும் நடக்கவில்லை
திமுக ஆட்சியில் எவ்விதத் தவறுகளும் நடக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் தேடினாலும் திமுக தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார். எங்கள் ஆட்சியில் மின்சார வாரியம் திறம்படச் செயல்பட்டது. ஆனால், இன்றைய தவேக ஆட்சியில் எந்தவித முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போதிய மின் உபகரணங்களோ, மீட்டர்களோ கையிருப்பில் இல்லை. இதனால் மாநிலம் முழுவதும் கடுமையாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் ‘பகுதி நேர’ அதிகாரி
முதலமைச்சர் விஜய் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணிகளைப் கவனிக்கும் ‘பகுதி நேர’ அதிகாரியாகச் செயல்படுகிறார். அதைத் தாண்டி மாநிலத்தில் நடக்கும் எந்தப் பிரச்சனையையும் அவர் கண்டுகொள்வதில்லை” என்றும் வி. செந்தில் பாலாஜி கடுமையாக விமரிசித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
Source link
