அஜித்தின் ரேசிங்கை பார்க்க வந்த நடிகை த்ரிஷா: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்று வரும் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித் போட்டியாளராக களமிறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியை நேரில் பார்க்க நடிகை த்ரிஷா திடீர் எண்ட்ரி கொடுத்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது,

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய், லண்டனக் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீ மான்ஸ் கார் பந்தயத்தை பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பந்தயக் கார்கள் சர்க்யூட்டில் சீறிப் பாயத் தொடங்கியபோது விஜய் பச்சைக் கொடியை அசைத்தார். அவரது வருகை பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெறும் இந்த கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ள நிலையில், இந்த போட்டியை விஜய் தொடங்கி வைத்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, படப்பிடிப்புக்காக லண்டனில் இருக்கும் நடிகை திரிஷா கிருஷ்ணனும் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் காணப்பட்டார்.

சில்வர்ஸ்டோனில் எடுக்கப்பட்ட வீடியோக்களில், பந்தயத்திற்கு முன்பு அஜித் குமார் விஜயை வரவேற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்ததுடன், பந்தயத் தளத்தில் அஜித்தை சந்தித்து வாழ்த்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன. வார இறுதியில் நடைபெற்ற இந்த பந்தய நிகழ்வை ஒட்டி விஜய், அஜித் மற்றும் திரிஷா ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. 

சர்க்யூட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றன. சில்வர்ஸ்டோனில் வெளியான ஒரு வீடியோவில் விஜய் பச்சைக் கொடியை அசைத்து பந்தயத்தை தொடங்கி வைப்பது பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், பந்தயம் தொடங்குவதற்கு முன்பு அஜித்தை விஜய் வாழ்த்துவது காணப்படுகிறது.

முன்னதாக வெளியான வீடியோக்களில், விஜய் அஜித்தை கட்டித்தழுவுவதற்காக ஓடிச் சென்ற காட்சிகளும், மேடையில் இருவரும் உரையாடிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. 2026-ம் ஆண்டு லீ மான்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்றுப் போட்டியாக சில்வர்ஸ்டோன் பந்தயம் நடைபெற்றது. இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை இந்தப் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

அஜித் குமார், பிரெஞ்சு வீரர் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து, ‘அஜித் ரெட்ஆன்ட் பை விராஜ்’ அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்று வருகிறார். அதேபோல், முன்னாள் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் ‘அஜித் ரெட்ஆன்ட் ரேசிங்’ அணிக்காக எல்.எம்.பி 3 (LMP3) பிரிவில் போட்டியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஒரு வீடியோவில், திரிஷா பாதுகாப்பு சோதனைப் பகுதியை கடந்து செல்வதும்  பதிவாகியுள்ளது. ஏற்கனவே நடிகை ராதிகா சரத்குமார், லண்டனில் திரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அஜித்தின் பந்தயத்திற்கு முன்பாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் தற்போது லண்டனில் நடைபெறும் திரைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர்.

திரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த ராதிகா சரத்குமார், “லண்டனில் அழகான திரிஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி! இந்த வார இறுதியில் களத்தில் களமிறங்கும் நம்முடைய ‘தல’ அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Source link