இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலி மலை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.,வில் இணைந்தனர்.

ராஜினாமா அந்த தொகுதிகள் மற்றும் இரு தொகுதிகளில் வென்றதால் முதல்வர் விஜய், ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

எனவே, மீதமுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு, தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர், இடைத்தேர்தலுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

மனு விபரம்: அரசியல் காரணங்களுக்காக, ராஜினாமா செய்ததால், மக்கள் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. எனவே, தேர்தல் செலவுகளுக்கு, அவர்களை பொறுப்பாக்கும் வகையில், நடைமுறை வகுக்க வேண்டும்.

தடை தேர்தல் முடிவு வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை, குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வர, ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link