ஆதார் கார்டில் இருப்பதை போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த அடையாள எண் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இதன் மூலம், ஒரு மாணவரின் கல்வி தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க முடியும்.
இந்த சிறப்பு வாய்ந்த டிஜிட்டல் மாணவர் அடையாள எண் “ஒரே நாடு – ஒரே மாணவர் அடையாள எண்” (One Nation, One Student ID) என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான எண்ணை வழங்கப்படுகிறது. அந்த எண்ணின் கீழ் அந்த மாணவனின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டங்கள், சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் பிற சாதனைகள் போன்ற கல்விசார் விவரங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
இந்த அடையாள அட்டை கல்வி மதிப்பெண்களை (Academic Credits) எளிதாக கண்காணிக்கவும், ஒரு கல்வி நிலையத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றவும் உதவும்.
