லண்டனில் கார் பந்தயம்: அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்திய முதல்வர் விஜய்

லண்டன்: லண்​டனில் நடை​பெற்ற கார் பந்​த​யத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார். முன்​ன​தாக பந்​த​யத்​தில் பங்​கேற்ற நடிகர் அஜித் குமாரை, முதல்​வர் விஜய் ஆரத்​தழுவி வாழ்த்​தி​னார்.

தமிழகத்​துக்கு புதிய தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக 6 நாள் அரசு முறை பயண​மாக முதல்​வர் விஜய் லண்​டன் வந்​துள்​ளார். இந்​நிலை​யில், லண்​டனில் இருந்து 128 கி.மீ. தொலை​வில் புகழ்​பெற்ற சில்​வர்​ஸ்​டோன் மோட்​டார் பந்தய மைதானத்​துக்கு முதல்​வர் விஜய் நேற்று சென்​றார். இங்கு நடை​பெறும் மிச்​செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்​த​யத்தை முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்​தப் போட்​டி​யில் நடிகர் அஜித்​கு​மார் பங்​கேற்​றார். அவருடன் இந்​தி​யா​வைச் சேர்ந்த முன்​னணி கார் பந்தய வீரர்​களும் கலந்து கொண்​டுள்​ளனர். இந்த போட்டி இந்​திய நேரப்​படி நேற்று இரவு 9.30 மணி​யள​வில் தொடங்​கியது.

முன்​ன​தாகப் பந்​த​யத்​தைத் தொடங்கி வைக்க வந்த முதல்​வர் விஜய்​யைக் காண ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் கூடி​யிருந்​தனர். அதைப் போலவே நடிகர் அஜித்​தின் ரசிகர்​களும் ஏராள​மானோர் குவிந்​திருந்​தனர். மைதானத்​தில் இரண்டு நடிகர்​களைப் பார்த்​ததும் அவர்​கள் உற்​சாக​மாகக் குரல் எழுப்பி மகிழ்ந்​தனர்.

ரசிகர்களைப் பார்த்து கையசைக்கும் முதல்வர் விஜய், நடிகர் அஜித்.

ரசிகர்களைப் பார்த்து கையசைக்கும் முதல்வர் விஜய், நடிகர் அஜித்.

கட்​டியணைத்து வரவேற்பு

மைதானத்​துக்கு வந்த முதல்​வர் விஜய்யை, நடிகர் அஜித்​கு​மார் கட்​டித் தழுவி வரவேற்​றார். இதைப் பார்த்​ததும் ரசிகர்​கள் உற்​சாக கோஷம் எழுப்​பினர்.

இந்த கார் பந்​த​யத்​தில் தனது ‘ரெட் ஆன்ட் பை விராஜ்’ அணி​யின் சார்​பில் அஜித் பங்​கேற்​கிறார்.

மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை வரவேற்று அழைத்து வரும் நடிகர் அஜித்.

மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை வரவேற்று அழைத்து வரும் நடிகர் அஜித்.

எல்​எம்​பி3 புரோ/ஆம் பந்​த​யத்​தில் அவர் பங்​கேற்​கிறார். இதையடுத்து பந்​த​யத்​தில் பங்​கேற்க மைதானத்​துக்கு நடிகர் அஜித்​கு​மார் வந்​தார். பின்​னர் மைதானத்​துக்கு சென்ற முதல்​வர் விஜய், நடிகர் அஜித்​கு​மாரின் பந்​தயக் கார் அருகே சென்று ஆரத்​தழுவி வாழ்த்​தி​னார்.

அங்​கிருந்​த​படி இரு​வரும் ரசிகர்​களின் கரகோஷத்தை ஏற்​றுக்​கொண்​டனர். மோட்​டார் கார் பந்​த​யத்​துக்கு முன்​ன​தாக நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் நடிகர் அஜித் குமார் கூறிய​தாவது: இந்​தப் போட்​டியைத் தொடங்கி வைக்க வரும் முதல்​வர் விஜய்யை வரவேற்​கிறேன்.

காரில் அமர்ந்திருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்.

காரில் அமர்ந்திருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்.

இது போன்ற பிரம்​மாண்​ட​மான விளை​யாட்டு நிகழ்​வு​கள் எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வில் நடத்​தப்பட வேண்​டும் என்று நான் விரும்​பு​கிறேன். சில்​வர்​ஸ்​டோன் மைதானத்​தில் எங்​களைச் சந்​திக்​கத் தனது பரபரப்​பான பணிக்கு இடை​யிலும் நேரம் ஒதுக்கி லண்​டன் வந்​ததற்​காகத் தமிழக முதல்​வர் விஜய்க்கு நான் மிகுந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

விளை​யாட்​டுத் துறையை ஊக்​குவிக்க முதல்​வர் பல நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். எனவே, இது​போன்ற விளை​யாட்டு பந்​த​யங்​களை இந்​தியா மற்​றும் சென்​னை​யில் நடத்​து​வதற்​குத் தேவை​யானவை என்ன என்​பதை நேரில் வந்து பார்​வை​யிடு​மாறு நாங்​கள் அவருக்கு அழைப்பு விடுத்​தோம். இவ்​வாறு நடிகர் அஜித் தெரிவித்​தார்​.

Source link