டாடா சன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவனமாகத் தொடரும் கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி; பொதுப் பங்குகளை வெளியிட உத்தரவு

எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ

டாடா குழுமத்திற்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாக, குழுமத்தின் முக்கிய முதன்மைப் பங்குதாரர் நிறுவனமான டாடா சன்ஸ் லிமிடெட், பதிவு செய்யப்படாத முதலீட்டு நிறுவனமாகத் தொடர்வதற்காகச் சமர்ப்பித்த விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, டாடா குழுமத்தின் பங்குதாரர் நிறுவனத்திற்கு “அனைத்து வழிகாட்டுதல்கள்/ அறிவுறுத்தல்களுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு” உத்தரவிட்டுள்ளது. இதன் பொருள் டாடா சன்ஸ் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் பொதுத்துறைக்கு வந்து பங்குச் சந்தைகளில் தனது பங்குகளைப் பட்டியலிட வேண்டும் என்பதாகும்.

ஆங்கிலத்தில் படிக்க:

டாடா சன்ஸ் நிறுவனம் முன்னதாகத் தனது பதிவுச் சான்றிதழைத் தன்னார்வமாகத் திருப்பி அளிக்கவும், பதிவு செய்யப்படாத கோர் முதலீட்டு நிறுவனமாக (சி.ஐ.சி) வகைப்படுத்தப்படவும் மத்திய வங்கியை அணுகியிருந்தது. டாடா டிரஸ்ட்ஸ் தலைவரும் டாடா சன்ஸ் இயக்குநருமான நோயல் டாடா, இந்நிறுவனம் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனமாகத் தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாரிகளுக்கு (சி.எஃப்.ஓ) ரிசர்வ் வங்கி எழுதியுள்ள கடிதத்தில், “மேற்கோள் காட்டப்பட்ட தலைப்பில் 2024 மார்ச் 28 தேதியிட்ட உங்கள் விண்ணப்பக் கடிதத்தைக் குறிப்பிட விரும்புகிறோம், அதில் டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் (டி.எஸ்.பி.எ) பதிவு செய்யப்படாத கோர் முதலீட்டு நிறுவனமாக (சி.ஐ.சி) வகைப்படுத்தப்படுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இந்தத் தலைப்பில் நீங்கள் அனுப்பிய பல தொடர் கடிதங்களையும் குறிப்பிட விரும்புகிறோம்.”

“மேற்கூறியவற்றைப் பரிசீலித்து, அனைத்துத் தொடர்புடைய காரணிகளையும் ஆய்வு செய்த பிறகு, பதிவு செய்யப்படாத சி.ஐ.சி ஆக வகைப்படுத்தப்படுவதற்காக சி.ஓ.ஆர்-ஐ தன்னார்வமாகத் திருப்பி அளிப்பதற்கான உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

“எனவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மேல் அடுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்.பி.எஃப்.சி-யு.எல்) பொருந்தக்கூடிய அனைத்து வழிகாட்டுதல்கள்/ அறிவுறுத்தல்களுக்கு உடனடியாக முழுமையாகக் கீழ்ப்படிவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்” என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் இது டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டுப் பங்குதாரர் நிறுவனமாகவும், மேல் அடுக்கு என்.பி.எஃப்.சி (என்.பி.எஃப்.சி-யு.எல்) ஆகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. “முழு இணக்கத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு” மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு, டாடா சன்ஸ் தனது ஒழுங்குமுறை இணக்கக் கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளைச் சரிசெய்து, மேல் அடுக்கு என்.பி.எஃப்.சி-களுக்குப் பொருந்தும் மேம்படுத்தப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனது செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் நிதி நடைமுறைகளை அமைத்துக் கொள்ளும் பொறுப்பை அளிக்கிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த வழிகாட்டுதல் அதன் இருப்புக் குறிப்பு, முதலீட்டு அமைப்புகள், இடர் மேலாண்மை அமைப்புகள், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் பிற ஒழுங்குமுறை செயல்பாடுகளை தீவிரமாகச் பரிசீலிப்பதைக் குறிக்கலாம். ஒரு என்.பி.எஃப்.சி-யு.எல் என்ற முறையில், பெரிய நிதி நிறுவனங்களின் சாத்தியமான முறைமை முக்கியத்துவத்தை ரிசர்வ் வங்கி மதிப்பிடுவதைப் பிரதிபலிக்கும் வகையில், குறைந்த அடுக்கு என்.பி.எஃப்.சி-களை விட கடுமையான ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்கு இந்நிறுவனம் உட்படுத்தப்படும்.

எனவே, ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் கூடுதல் கண்காணிப்பு, உள் நடைமுறைகளில் மாற்றங்கள் மற்றும் வாரிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வெளிப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கு வழிவகுக்கும். மேலும், ஒரு என்.பி.எஃப்.சி-யு.எல் ஆக அதன் நடவடிக்கைகள் ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்ய, சில குழும அளவிலான நடைமுறைகளை பங்குதாரர் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்.

டாடா சன்ஸ் அடையாளம் காணப்பட்ட ஒழுங்குமுறை இணக்க இடைவெளிகளை நீண்ட காலப் பயிற்சியாகக் கருதாமல் விரைவாக முடிக்க வேண்டும் என்ற ஒழுங்குமுறை அமைப்பின் எதிர்பார்ப்பையும் ரிசர்வ் வங்கியின் இந்தத் தொடர்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, டாடா சன்ஸ் நிறுவனத்தின் உடனடி முன்னுரிமை, சரியான நேரத்தில் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு பட்டியலிடப்படுவதை நிரூபிப்பது, தேவையான இடங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது மற்றும் அதன் நிர்வாகம் மற்றும் நிதிக்கட்டமைப்பு மேல் அடுக்கு என்.பி.எஃப்.சி-யு.எல்-க்கான ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதாகும்.

டாடா சன்ஸ் பட்டியலிடப்படுவது, ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் தனது 18.3 சதவீத பங்கைப் பணமாக்கவும், அவர்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு நிதி திரட்டவும் உதவும்.

முன்னதாக டாடா சன்ஸ் நிறுவனத்தை மேல் அடுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்.பி.எஃப்.சி-யு.எல்) பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்திருந்தது. இருப்பினும், டாடா சன்ஸ் பதிவை நீக்குவதற்கான விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

ஒரு என்.பி.எஃப்.சி நிறுவனம் என்.பி.எஃப்.சி-யு.எல் ஆக வகைப்படுத்தப்பட்டதும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது (குறிப்பிட்ட) அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் கூட, அந்த அடுக்கில் வகைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அது மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை தேவைக்கு உட்படுத்தப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு வகைப்பாட்டிற்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாவிட்டால் மட்டுமே மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக் கட்டமைப்பிலிருந்து வெளியேற தகுதி பெறும்.

டாடா சன்ஸில் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸின் அறங்காவலர்கள், டாடா சன்ஸைப் பட்டியலிடும் விஷயத்தில் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர்.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா மற்றும் சில முன்னாள் டாடா சன்ஸ் இயக்குநர்கள் டாடா சன்ஸைப் பட்டியலிடுவதற்கு எதிராக உள்ள நிலையில், டாடா டிரஸ்ட்ஸின் இரண்டு அறங்காவலர்களான வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் டாடா சன்ஸைப் பட்டியலிட வாதிட்டுள்ளனர். டாடா சன்ஸில் 18.3 சதவீத பங்குகளை வைத்துள்ள பல்லோன்ஜி மிஸ்திரி குழுமம் டாடா சன்ஸைப் பட்டியலிடுவதற்கு ஆதரவாக உள்ளது.

டாடா டிரஸ்ட்ஸின் அறங்காவலர் ஒருவரின் கூற்றுப்படி, கட்டுப்பாடானது, அறக்கட்டளைகளாக இருந்தாலும், முந்தைய காலங்களில் சாத்தியமான முன்மொழிவாக இருந்தது, ஆனால் டாடா சன்ஸுக்கு இப்போது ஸ்திரத்தன்மையும் கடுமையான ஒழுங்குமுறை பொறிமுறையும் தேவை. “டாடா டிரஸ்ட்கள் சமீபத்திய காலங்களில் பிளவுபட்டதாகவும் கொந்தளிப்பானதாகவும் இருந்துள்ளன, மேலும் சிறந்த எதிர்காலத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பட்டியலிடுதல் பெரிய அளவிலான பங்குகள், வாரிய இடங்கள் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் டிரஸ்ட்களைப் பெரிதும் பாதிக்காது என்றும், அவர்கள் தங்களது விளம்பரதாரர் தகுதியை இழக்க மாட்டார்கள் என்றும் நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“ஒரு பொதுப் பட்டியல் சிறுபான்மை பங்குதாரர்களின் மதிப்பைத் திறப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியத் தக்கவைக்க டாடா சன்ஸுக்கு மூலதனத்தையும் வழங்கும்” என்று மற்றொரு டாடா டிரஸ்ட் அறங்காவலர் கூறினார்.

மேல் அடுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனமாகக் கருதப்படுவதால், பங்குச் சந்தைகளில் டாடா சன்ஸ் பட்டியலிடப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைகள் கோருவதால், டாடா சன்ஸைப் பட்டியலிடும் விஷயம் சில காலமாகப் பரிசீலனையிலும் விவாதத்திலும் உள்ளது.

என்.பி.எஃப்.சி-யு.எல்-ஐ தீர்மானிப்பதற்கான முந்தைய நடைமுறையை மாற்றி, ரூ. 1 லட்சம் கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட என்.பி.எஃப்.சி-கள் மட்டுமே என்.பி.எஃப்.சி-யு.எல்  ஆக வகைப்படுத்தப்படும் என்ற எளிய அளவுகோலை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. டாடா சன்ஸ் 2024 இல் தனது கடனைத் திருப்பிச் செலுத்தியதிலிருந்து பொது நிதிக்கான நேரடி அணுகல் எதுவுமில்லையென்றாலும், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்கள் இதில் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளதால், ரிசர்வ் வங்கியின் வரைவிலக்கணத்தின் படி அது பொது நிதியின் மறைமுகப் பயனாளியாகவே தொடர்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அளவு அடிப்படையிலான ஒழுங்குமுறை (எஸ்.பி.ஆர்) கட்டமைப்பின்படி, ஒரு மேல் அடுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி-யு.எல்) என்பது, அதன் அளவு, முறைமை முக்கியத்துவம், பரஸ்பர இணைப்பு மற்றும் இடர் சுயவிவரம் ஆகியவற்றின் காரணமாக, ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் முறையைப் பயன்படுத்தி, மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக் கண்காணிப்பு தேவை என ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்படும் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும்.

Source link