சென்னை: அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா” என பேசியிருந்தார்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரே கண்டித்திருந்தனர். இந்த நிலையில் தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள். இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
