தென்காசி: தென்காசியில் அரசு பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து, 32 பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ், வேட்டைக்காரன் குளம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில், 17 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
