பிரிக்ஸ் உச்சி மாநாடு: 2வது நாள் நிகழ்ச்சி தொடங்கியது

புதுடில்லி: இந்தியா தலைமை பொறுப்பில் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இன்று (செப். 13) தொடங்கியது.

பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அதை தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாளான இன்று (செப். 13) பாரத் மண்டபத்தில் முக்கியக் கூட்டங்களும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் அவுட்ரீச் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

நேற்று (செப்.12) தொடங்கிய இந்த இரண்டு நாள் மாநாட்டில், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இன்று 2வது நாள் நிகழ்ச்சியில்,இந்தியாவின் தலைமையில் தாங்குதிறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை (Resilience, Innovation, Cooperation and Sustainability – RICS) என்ற கருப்பொருளின் கீழ் எதிர்கால வளர்ச்சிக்கான கூட்டு ஒத்துழைப்புகள் குறித்து தலைவர்கள் விவாதிக்கின்றனர்.

அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துகிறார்.

Source link