காங்கிரஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த கம்யூனிஸ்ட்; விழிபிதுங்கி நிற்கும் தவெக!

தமிழ்நாட்டில் மதுராந்தம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி என்கிற தொகுதியிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு திமுக சார்பில் சேது செல்வம் என்பவரும் ஆளுங்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.

அதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் போட்டியிடுகிறார் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தவெகவின் தலைவரான தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஆதரவு கேட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக கூட்டணியில் இடம்பெறாமல் புதுச்சேரியில் மட்டும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்துள்ளது. ஆனால், தவெக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், தவெக ஆதரவுடன் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவும் காங்கிரஸும் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால கூட்டணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பாளர் சலீமிடம் நேற்று இரவு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பாக போட்டியிடும், அதற்கு தவெகவும் காங்கிரஸும் ஆதரவு அளிக்க வேண்டும். இது தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய்யை சந்தித்து ஆதரவை பெறுவோம். அதனால், இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கறாராக கூறியதால் காங்கிரஸ் தலைவர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் திரும்பிவிட்டனர். இருப்பினும் காங்கிரஸ் சார்பில் விநாயகம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதா அல்லது ஆட்சி நிலைப்பதற்கு ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிப்பதா என தவெக விழிபிதுங்கி நிற்கிறது. 

Source link