ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. மாதவன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார்.
ஆக.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. செப். 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம், நெட்பிளிக்ஸில் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமும் இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் டாப் 5 தரவரிசைக்குள் இப்படம் இடம்பெற்று உள்ளது.
