கோவை: கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவன், பெண் போலீஸ் அதிகாரியை தாக்கியபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கோவை வெள்ளலுாரை சேர்ந்த சந்தோஷ், 25, தவசி, 28, என்ற இருவர், 15 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்துச்சென்றனர். சிறுமியை மிரட்டி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்ற இருவரும் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் விசாரித்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட சென்றபோது, உடன் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லியை தவசி என்பவன் அரிவாளால் தாக்கினான். இதையடுத்து உடன் சென்றிருந்த எஸ்.ஐ., சிலம்பரசன் துப்பாக்கியால் முழங்காலில் சுட்டார். காயம் அடைந்த தவசி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். கைதான இருவரிடமும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
