ஈரான் – எமிரேட்ஸ் பேச்சு: சமரச முயற்சியில் இந்தியா

புதுடில்லி:மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு நடுவே, டில்லியில் நடந்த, ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே ஈரான் மற்றும் யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்த போர், ஆறு மாதங்களைத் தாண்டியும் தொடர்கிறது. யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், டில்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டுக்கு இடையே, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், எமிரேட்சின் தலைநகரான அபுதாபியின் பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது பின் சயீத் ஆகியோர், நேற்று ம் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரு தலைவர்களும் சந்தித்து பேசியதை உறுதி செய்த ஈரான் துாதரகம், அது தொடர்பான படத்தையும் வெளியிட்டது. கடந்த ஏப்ரலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், ஈரான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நட்பு நாடுகளுடனான பேச்சின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.இந்நிலையில், நம் நாடு தலைமையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் சந்தித்து பேசியது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் சமரசத்தினால், பேச்சுக்கு இரு தரப்பும் முன்வந்ததாக கூறப்படுகிறது.

Source link