கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும். சிஐஎஸ்எஃப் தீயணைப்புப் பிரிவு SI பதவிக்கு அறிவியல் பிரிவு (Physics, Chemistry, Maths) அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ அவசியம்.
வயது வரம்பு:
01.08.2026 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு பிரிவு பணியிடங்களுக்கு 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language & Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதற்கட்ட கணினி வழித் தேர்வு (Paper-1), உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு (PST/PET),
இரண்டாம் கட்டத் தேர்வு (Paper-2) மற்றும் மருத்துவப் பரிசோதனை.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்வு மையம் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/login என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
SSC அதிகாரப்பூர்வ Websiteக்கு சென்று முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.
Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்து, தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்ப வேண்டும்.
தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்ய வேண்டும்.
இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
