நாங்க திமுக மாதிரி கிடையாது; எந்தக் கட்சியாக இருந்தாலும் தப்புதான்; அமைச்சர் விக்னேஷ் பேட்டி

திண்டுக்கல்: ”நாங்க திமுக மாதிரி கிடையாது; எந்தக் கட்சியாக இருந்தாலும் தப்புதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி: போன ஆட்சி மாதிரி பார் செயல்பாடு சிஸ்டமில் இருக்காது. சில சட்டமாற்றம் கொண்டு வந்து கொண்டு இருக்கிறோம். சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர் ஆனந்த் தெளிவாக சொல்லி இருந்தார். தப்பு பண்ணுவதில் நாங்கள் கட்சியை பார்க்க போவதில்லை.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தப்புதான். தவெகவாக இருந்தாலும் சரி, திமுக, அதிமுகவாக இருநதாலும் சரி. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் நிச்சயம் அவர்கள் மீது கட்சி சார்ந்த மற்றும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பல பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நாங்க திமுக மாதிரி கிடையாது.

கள்ளச்சந்தையில் மது விற்பனை, மதுவை அதிக விலைக்கு விற்பது போன்ற தவறுகள் நடந்தால், உடனடியாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். பாரபட்சமின்றி, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். பார்வைக்கு கொண்டு வந்த அடுத்த நொடியே நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் மற்ற கட்சி மாதிரி இந்த பக்கம் நீ நடத்து, நாங்கள் இந்த பக்கம் நடத்த மாட்டோம் என்று சொல்கிற ஆட்கள் கிடையாது. சமூக வலைதளத்தில் அதிக விலைக்கு மது விற்பனை குறித்து வீடியோ வந்த உடனே, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு காட்டாமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடைசியாக செப்டம்பர் 8ம் தேதி நடந்த, ஆய்வு கூட்டத்தில் எந்த மாவட்டத்தில் டாஸ்மாக் தொடர்பாக அதிக பிரச்னை நடக்கிறதோ, அதற்கு விற்பனையாளர், மேற்பார்வையாளரை மட்டும் பொறுப்பாளராக கருத மாட்டோம்.

அதற்கு அந்த மாவட்ட மேலாளருக்கும் பொறுப்பு இருக்கிறது. இனிமேல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்; எடுத்த உடனே கடுமையான தண்டனைகள் மூலம் மாற்ற முடியும் என்பதில் எனக்கும், முதல்வர் விஜய்க்கும், இந்த அரசுக்கும் உடன்பாடு இல்லை. அவர்களுக்கு தேவையை கொடுத்து கடந்த செப் 1ம் தேதி முதல் தான் நடவடிக்கை எடுப்பதை துவங்கி இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

Source link