சென்னை: நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என ஜென்சி தலைமுறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் பேசியதாவது: இளைய தலைமுறையினர் ஒரு படித்த இளைஞராக நமது சுற்றுசூழலில் உள்ள நிலைமையை புரிந்து கொள்வதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வது உடன், அந்த ஏரியாவில் நீங்கள் தலைவன் மாதிரி, பழக வேண்டும், பேச வேண்டும்; தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜென்சி இளைஞர்கள்
இப்பொழுது இருக்கும் சூழ்நிலை என்ன? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இளைஞராக எனக்கு என்ன பொறுப்பு இருக்கிறது; இந்த நாட்டிற்கு நான் என்ன செய்ய வேண்டும். ஜென்சி இளைஞர்கள், ஜென்சி அல்பா இளைஞர்கள் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்; நீங்கள் சொல்வதை கேட்பதற்கு நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம். ஆனால் உங்களிடம் ஒரு சிந்தனையை விட்டு செல்ல விரும்புகிறேன். நீங்கள் இருக்க கூடிய இடத்தில் கற்றவர், படித்தவர், பட்டதாரி உங்கள் சுற்றுசூழலில் என்ன நடக்கிறது; ஏன் இப்படி நடக்கிறது. இதில் நம்முடைய பங்கு என்ன?
பொறுமை
இந்த நாட்டிற்கு நம்ம மூலமாக என்ன நடக்க முடியும் என்பதை நீங்கள் பொறுப்புடன் அறிந்து, ஆராய்ந்து தலைமை ஏற்று, உங்கள் கூட இருப்பவர்களை கட்டுப்போடு அழைத்து செல்ல வேண்டும். நீங்கள் படியுங்கள், பட்டம் ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் வேலை செல்லுங்கள் அல்லது சொந்தமாக தொழில் பண்ணுங்கள்.
ஆனால் அந்த பொறுப்புடன் நீங்கள் தலைவனாக, தலைவியாக, நம்ம நாட்டில் இப்படி எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது, நாம் பொறுமையாக இருக்க வேண்டும்; நல்ல படியாக நடக்க வேண்டும்; நாட்டை காப்பாற்றக் கூடிய பொறுப்பை ஏற்க கூடிய ஜென்சிக்கு நான் சொல்வது, நமக்கு என்ன இருந்தாலும் நமது நாடடை விட்டுக்கொடுத்து விடக்கூடாது.
தலைமை பொறுப்பு
இன்றைக்கு சில நாடுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். மக்கள் நாட்டில் இருந்து துரத்தப்படுகிறார்கள்; மக்கள் அங்கு இருந்து அவஸ்தையில் ஓடுகிறார்கள்; இன்றைக்கு இந்த நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியே செல்லும் இளைஞர்களிடம் நான் கேட்டுக்கொள்வது நாட்டின் தலைமை பொறுப்பு உங்கள் கையில் இருக்க வேண்டும்.
இந்த நாடு முதன்மையாக இருக்க வேண்டும்; இந்த நாடு இருந்தால் தான் நாம் இருப்பதுக்கு வீடு இருக்கும். அதனால் நீங்கள் எல்லோரும் இன்றைக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, நாட்டை முதன்மையாக வைக்க பங்களிக்க வேண்டும். நாடு நல்லப்படியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் எல்லோரும் நல்லப்படியாக வாழ முடியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
