சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். வரும் அக்டோபர் 23 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு வித்துள்ளது.
