பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்; பாஜ தேசிய தலைவர் நிதின் நபின்

-நமது டில்லி நிருபர்-

டில்லியில் செய்தியாளர்களிடம் நிதின் நபின் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் அவரது குடும்பத்தை கண்ணியமற்ற முறையில் தாக்கிப் பேசுவது, காங்., தலைவர்கள், கையாளும் ஓர் அரசியல் மரபாக மாறிவிட்டது.

இது, அக்கட்சிக்குள் நிலவும் விரக்தியையும், நம்பிக்கையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான அவமதிப்புகளை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பிரதமர் மோடி இந்த தேசம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார். நீங்கள் அவரை அவமதித்தால், இந்த நாட்டு மக்கள் கடந்த காலங்களில் உங்களைப் பொறுப்புக்கூறச் செய்திருக்கிறார்கள்.

எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சி முற்றிலும் ஒரு திவாலான மனநிலையிலிருந்து செயல்படுகிறது, அந்த மனநிலை இன்று கட்சிக்குள் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு நிதின் நபின் கூறினார்.

Source link