Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.10.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும்

மேஷம்

தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.

ரிஷபம்

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். சேமிப்பு உயரும்.

மிதுனம்

ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இடர்பாடுகள் வந்து அகலும்.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

துலாம்

வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படும். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும், கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு

வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

மகரம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

கும்பம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.

மீனம்

யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

Source link