சீனா ஊடுருவியதாக போலி வீடியோவை பரப்பியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: அருணாச்​சல பிரதேசத்​தின் சில பகுதி​கள் சீனாவின் கட்​டுப்​பாட்​டில் இருப்​ப​தாக இந்​திய ராணுவ அதி​காரி ஒரு​வர் கூறுவது போன்ற வீடியோவை காங்​கிரஸ் மூத்த தலை​வர் ரிது சவுத்ரி தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​தார்.

அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில், “வெட்​கக்​கேடு; அருணாச்​சல பிரதேசத்​தில் உள்ள அசாஃபிலா, லாங்ஜு மற்​றும் டக்​சிங் ஆகிய பகுதி​களை சீனா கைப்​பற்​றி​விட்​ட​தாக லெப்​டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா கூறுகிறார். தளவாடங்​களுக்​கான கோரிக்​கைகள் இருந்​த​போதிலும், சீனா​வுக்​குப் பதிலாக ‘ஜென் ஸி’ தலைமுறைக்கு எதிராக ராணுவம் களமிறக்​கப்​படுவ​தாக தகவல்​கள் வரு​கின்​றன” என குறிப்​பிட்​டார்.

இது தொடர்​பாக ராணுவத்​தின் உண்மை சரிப்​பார்ப்பு பிரிவு வெளி​யிட்ட அறிக்​கை​யில், “2023 அக்​டோபர் 27 அன்று ஜம்மு காஷ்மீரின் குப்​வாராவில் நடை​பெற்ற பத்​தி​ரி​கை​யாளர் சந்​திப்​பில், அப்​போதைய மேஜர் ஜெனரல் கிரிஷ் காலியா, எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்​டைக் கடந்து நடந்த ஊடுரு​வல் முயற்​சிகள் குறித்​துப் பேசி​யபோது எடுக்​கப்​பட்ட வீடியோ டிஜிட்​டல் முறை​யில் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது. அதில் அந்த அதி​காரி கூறிய​தாகப் புனையப்​பட்ட கருத்​துகள் இடம்​பெற்​றுள்​ளன. அது உண்​மையல்ல” என விளக்​கம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், போலியான வீடியோவை பரப்பி ராணுவத்​தின் நற்​பெயருக்​குக் களங்​கம் விளை​வித்​த​தாக காங்​கிரஸுக்கு பாஜக கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “ராணுவத்​தின் நற்​பெயரைக் கெடுக்​கும் வகை​யில் போலியான ஏஐ வீடியோவைப் பரப்​பியதற்​காக காங்​கிரஸ் கட்சி நாட்டு மக்​களிடம் மன்​னிப்​புக் கேட்க வேண்​டும். இது நமது எதி​ரி​களின் இழிவான செயல்​களுக்கு நிக​ரானது. காங்​கிரஸ் கட்சி இந்​தி​யாவின் எதி​ரி​களுக்​காக ஒரு இழிவான பிரச்​சா​ரத்தை நடத்தி வரு​கிறது” என தெரி​வித்​துள்​ளார்.

Source link