தேனி சிறையில் இருந்த தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர்; 2 பேரை தேடுகிறது தனிப்படை!

-நமது நிருபர்-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட விசாரணை கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இச்சிறையில் 3வது பிளக்கில் 92 கைதிகள் இருந்தனர்.

அக்., 26 இரவு 10:00 மணிக்கு முத்து இளங்கோவன் 23, வலிப்பு வந்தது போல் நாடகமாடினர். இதையறிந்து வந்த சிறைக் காவலர்கள் மதன்மோகன், ஸ்டாலின் பிரபு, தங்க பாண்டி ஆகியோரை கைதிகள் 17 பேர் தாக்கி விட்டு தப்பினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பிய 17 கைதிகளில் 15 பேர் சிக்கினர். 4 பேரை தேடும் பணி நடந்தது.

தற்போது அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரெஜின், மதுரையைச் சேர்ந்த பொன் முத்து செல்வம் கைது செய்யப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் 2 பேரை தனிப்படை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மலைப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நிருபர்களிடம் தெற்கு மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி கூறகையில், ”தேனி சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர்; தப்பிச் சென்ற மற்ற இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது”, என்றார்.

Source link