டெஹ்ரான்: இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டது. பலநாடுகளில் எரிபொருட்களின் விலை உயர்ந்தது.
இதனிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் தலையீடு காரணமாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு அந்த ஜலசந்தி திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
