புதுடில்லி:டில்லியில், 1,000 புதிய கழிவறைகள் கட்டப்பட உள்ளன. அவற்றின் உள்ளே, ‘கியாக்ஸ்’ எனும் நவீன உணவகங்கள் கட்டப்பட உள்ளன. அந்த உணவகத்தில் கழிவறைகளும் இருக்கும். இதன் வாயிலாக, அந்த புதிய தலைமுறை கழிவறைகளை பராமரிப்பவரே, அந்த உணவகங்களையும் நிர்வகிப்பார்.
புதிய தலைமுறை கழிவறை வளாகங்களை அமைக்க, 300 கோடி ரூபாயை மாநில அரசு, முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளது. இந்த கழிவறை வளாகத்தின் உள்ளேயே, குளிர்பானங்கள் விற்கும் கடையான, கியாக்ஸ் உணவகங்களும் அமைகின்றன.
இப்போது, 1,000 புதிய கழிவறைகள் வளாகங்கள் கட்டப்பட உள்ளன. இந்த பணிகள், அடுத்த ஆண்டிற்குள் முடிவடையும்.
உணவகங்களுடன் கூடிய கழிவறை வளாகங்களை கட்டும் முறையை, டில்லி மாநில சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகம் மேற்கொள்கிறது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வளாகத்தை பராமரிக்கும் நபரே, உணவகங்களையும் நிர்வகிப்பார். உணவகங்களுடன் கூடிய கழிவறைகள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இருக்கும்.
பிசியான சந்தை பகுதிகளான சாந்தினி சவுக், சரோஜினி மார்க்கெட் ஆகிய இடங்களில் இப்போதைக்கு முதற்கட்டமாக துவக்கப்படும், இந்த புதிய தலைமுறை கழிவறைகளின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
