முன்னாள் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்து விசாரிக்க கோரி வழக்குகள்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில், சொத்து விபரங்களை மறைத்தது குறித்து, வருமான வரித் துறை விசாரணை நடத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

சட்டசபை தேர்தலில், அதிமுக, சார்பில், சென்னை ராயபுரம் – ஜெயகுமார், விழுப்புரம் மயிலம் – சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் – சீனிவாசன், நாமக்கல் குமாரபாளையம் – தங்கமணி ஆகியோரும், கோவை வடக்கில், பா.ஜ., வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களில், சொத்து விபரங்களை மறைத்து உள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில், விரையில் விசாரணைக்கு வரவுள்ளன.

Source link