லக்னோ: ராகுலுக்கு இரட்டை குடியுரிமை பெற்றதாக ககூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என

லக்னோ: ராகுலுக்கு இரட்டை குடியுரிமை பெற்றதாக ககூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு இந்திய குடியுரிமை உடன் பிரிட்டன் குடியுரிமை உள்ளதாக கூறி கர்நாடகாவை சேர்ந்த விக்னேஷ் சிஷிர் என்பவர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர்,ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பிஎன்எஸ், அலுவலக ரகசிய சட்டம், வெளிநாட்டினருக்கான சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராகுல் பிரிட்டன் குடிமகன் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது. அவர் லோக்சபா எம்பி பதவிக்கு போட்டியிட முடியாத எனக்கூறியிருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து விக்னேஷ் சிஷிர் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ராகுல் இரட்டை குடியுரிமை வைத்துள்ளது குறித்து உத்தர பிரதேச அரசு விசாரணை நடத்த வேண்டும். அல்லதுமத்திய அமைப்புகளின் விசாரணைக்கு மாற்றி பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Source link