'வாகன விற்பனையை மேற்காசிய போர் பாதிக்கவில்லை'

புதுடில்லி : மேற்காசிய போர் காரணமாக, உள்நாட்டு வர்த்தக வாகன விற்பனையில் பாதிப்பு எதுவும் இல்லை என, அசோக் லேலண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அடிப்படை பொருளாதார செயல்பாடுகள் வலுவாக இருப்பதால், வர்த்தக வாகன விற்பனையை நிலையாக வைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அந்நிறுவனத்தின் இலகுரக வாகன பிரிவு தலைவர் அமன்தீப் சிங் கூறுகையில், ”போர் காரணமாக வாடிக்கையாளர்கள் முன்பதிவை தாமதிப்பதில்லை; எப்போதும் போல் விற்பனை தொடர்கிறது. ஆனால், சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்,” என்றார்.

Source link