மீரட்: உத்தர பிரதேசத்தில், சாலையில் சென்ற முதலையை, வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி பிடித்தனர். கால்நடை

மீரட்: உத்தர பிரதேசத்தில், சாலையில் சென்ற முதலையை, வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி பிடித்தனர். கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின், கங்கை நதியில் முதலை விடப்பட்டது.

உ.பி., மாநிலம் மீரட் மாவட்டம் சம்ராத் கிராமத்தின் பிரதான சாலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் முதலை ஒன்று ஊர்ந்து சென்றது. கிராம மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

இரண்டு மணி நேரம் போராடி முதலையை வலைவீசி பிடித்தனர். அதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள், முதலையை பரிசோதனை செய்தனர். பின், கங்கை நதியில் முதலை விடுவிக்கப்பட்டது.

ஹஸ்தினாபூர் சரக வனத்துறை அதிகாரி குஷ்பூ உபாத்யாய் கூறியதாவது:

சம்ராத் கிராமத்தில் முதலை புகுந்தது குறித்து நேற்று முன் தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. நாங்கள் சென்ற போது, ஒரு புதருக்குள் முதலை பதுங்கி இருந்தது. இதனால், அதை வலைவீசி பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

மிகப்பெரிய முதலை என்பதால், ஆக்ரோஷத்துடன் இருந்தது. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் புதர் அகற்றப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், முதலை பிடிபட்டது. மக்கர் என்ற வகையைச் சேர்ந்த அந்த முதலை, 2.25 மீட்டர் நீளம், 150 கிலோ எடை இருந்தது.

பொதுவாக ஆறு, குளம் மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளில் இந்த வகை முதலைகள் வசிக்கும். தங்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணர்ந்தால் மட்டுமே ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தும். கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின், கங்கை நதியில் முதலையை விடுவித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link