திருச்சி: தமிழகத்துக்கு தேவையானதை டில்லியில் பெற்றுத்தருவதற்கு ராணுவ வீரனை போல் டில்லியில் போராடுவேன் என

திருச்சி: தமிழகத்துக்கு தேவையானதை டில்லியில் பெற்றுத்தருவதற்கு ராணுவ வீரனை போல் டில்லியில் போராடுவேன் என திருச்சியில் நடந்த கூட்டத்தில் ராகுல் உறுதியளித்து உள்ளார்.

வலுவிழந்த அதிமுக

திருச்சி துறையூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்த தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல. முன்பு நடந்ததை விட வேறுபட்டதாக இருக்கும்.ஒருபுறம் இருக்கும் கூட்டணி உங்களுக்கு தெரியும். மறுபுறம் அதிமுக பாஜ கூட்டணி உள்ளது.முதல்வர் ஸ்டாலினை அகற்றிவிட்டு, பொம்மை முதல்வரை அமர்த்த பாஜ திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் சிறப்பான கட்சி. தமிழக மக்களுக்காக போராடிய கட்சி இன்று வலுவிழந்து காணப்படுகிறது.

இன்றைய அதிமுக, பாஜவின் முகமூடியாக செயல்படுகிறது. இந்த வழியில் பாஜவும், ஆர்எஸ்எஸ் ம் தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர். அவர்கள் தமிழர்களின் கலாசாரம் , பண்பாடு, மொழியை சிதைப்பதற்கு செய்கின்றனர்.

மிரட்டல்

தமிழ் தொன்மையான மொழியாக விளங்குவதடன், மக்களின் ஆன்மாவாக திகழ்கிறது.தமிழ் மக்களின் வீரத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதனால் தான் அதிமுகவின் ஆன்மாவை பிடித்துள்ளனர். தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜவிடம் சரண் அடைந்துள்ளனர். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மிரட்டப்படுகின்றனர்.

சமரசம் கிடையாது

ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்பது பாஜவுக்கு தெரியும். தமிழகத்தின் எந்த விஷயத்திலும் எதற்காக சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்பது பாஜவுக்கும் தெரியும். மகளிர் இடஒதுக்கீடு மூலம், மறைமுகமாக தொகுதி மறுவரையறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சிக்கின்றனர்.

தற்போது வரை அவர்களால் நாட்டின் அரசியல் வரைபடத்தை பிரிக்க முயற்சி செய்கின்றனர்.சாதி, மதம் மொழியால் மக்களை பிரித்து நாட்டை துணடாட பாஜ முயற்சி செய்கிறது.நாட்டின் ஸ்திரத்தன்மையை குறைக்க முயற்சி பாஜ செய்கிறது. தேர்தல் கமிஷன் உள்ளிட்ட அரசியலமைப்புகளை பாஜ கட்டுப்படுத்த முயற்சிகள் செய்கிறது.

தமிழகத்தின் சமூக நீதி பாஜவை உறுத்துகிறது. சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது. அதனை சிதைக்க முயற்சி செய்கிறது. சமூக நீதியை நினைத்து இந்தியா பெருமைப்பட வேண்டும். சமூக நீதியை பாதுகாப்பதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் தமிழகத்திடம் இருந்து மற்ற மாநிலங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. முடியவில்லை. அவர் சமரசம் செய்து கொண்டுவிட்டார்.டிரம்ப் என்ன சொல்கிறாரோ, மோடி செய்வார். அதைப்போல் தான் இபிஎஸ், தன்னிடம் பணிந்து கிடக்க வேண்டும் என நினைக்கிறார்.

நடக்காது

வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது. இந்தியாவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார். தனது பிம்பத்தை பாதுகாத்து கொள்ள விவசாயிகள், தரவுகள், தொழில்களை டிரம்ப்பிடம் விற்றுவிட்டார். மோடியும், அமித்ஷாவும், முதல்வரை மிரட்டி என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு போதும் நடக்காது.

மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கனவு காண உரிமை உள்ளது. அவர்களின் கனவு பழிக்காது. அவர்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாது. தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை சிதைப்பதற்கும் அவர்களை அனுமதிக்க மாட்டோம்.

ராணுவ வீரனாக

தமிழக மக்களுடனான எனது உறவை யாராலும் குழைத்துவிட முடியாது. இது அரசியல் உறவு மட்டுமல்ல. பரஸ்பர உறவு மற்றும் அன்பு அடிப்படையில் உள்ளது. தமிழகம் மற்றும் மக்களின் உரிமையை பாதுகாப்பேன். உங்களின் வீரனாக டில்லியில் செயல்படுவேன். தமிழகத்துக்காக டில்லியில் எது தேவைப்படுகிறதோ அதற்காக போராடுவேன். தமிழகத்துக்காக என்ன வேண்டும். குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதை செய்வேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

சோதனை

திருச்சி துறையூரில் பிரசாரம் செய்ய ராகுல் வந்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

நேரலை

திருச்சிதுறையூரில் ராகுல் பிரசாரம் தினமலர் சமூக வலைதளபக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Source link